முதல் பக்கம்

அன்புள்ள அப்பா

அப்பு ஆச்சி பாசம்

சின்ன வயசில ரெம்ப சின்ன வயசில

அப்பு ஆச்சியின் பாசம் அது கடலின் எல்லையே

அவர்கள் போன பின்னரும் நினைவு போகவில்லையே

என் வாழ்க்கைப் பாதையில் நல்ல வழியினை காட்டி சென்ற அவர்கள்

என்றும் இதயதீபமே என்னில் வாழும் தெய்வமே

மேலும்

அன்பின் உருவமாய் தரணியில் வாழ்ந்தார்

அன்னை போல் என்றும் எமை நெஞ்சில் வைத்தார்

ஆறாவது பிள்ளையென நான் நோயோடு பிறக்க

அப்பாவோ எனைக்காக்க தான் நின்று தவிக்க

 

உழைப்பாலும் வான்போல உயர்ந்து நின்றார்அப்பா

சேவை செய்வதிலும் முன் நிற்பார் என்றுமே அப்பா

தன் கையால் யாவருக்கும் கொடுத்தவர்தான் அப்பா

தற் பெருமை இல்லாத தங்கம் தான் அப்பா

 

உன்னதமாய் இறைபணியை செய்து வாழ்வில் முடித்தார்

உயிர் இருக்கும் வரை தன்னால் இயன்றளவு செய்தார்

 

 

 

நேரடி ஒலிபரப்பு

Live Imaigal Tv

10 வருட நிறைவை தொட்டு நிற்கும் www.asai100.com

 

எமது இணையத்தளத்தில் 10 வருட காலத்தில் சமுக சேவையாக தாயகத்தில் மாதகல்‚ சங்கானை‚ மானிப்பாய் ஆகிய 3 இடங்களிலும் ஜரோப்பாவிலும் ‚ கனடாவிலும் கட்டணம் இன்றி கனிணி வகுப்பு மற்றும் கீபோட் இசை வகுப்பு 5000 திற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து பல சிறுவர்கள் ‚ இளையவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது இந்த இணையத்தளம்.

தற்போதும் விரும்பியவர்களுக்கு கட்டணம் இன்றி கீபோட் இசை வகுப்பு சொல்லிக் கொடுக்கப் படுகின்றது.

திறமைகள் வளர்த்து சிறுவர்கள் நாமும் திசை எங்கும் பரவி வளமுடன் வாழ்வோம்.

இசைப்பூக்கள் பாடல் நிகழ்ச்சி

3 வயது தொடக்கம் 21 வயது வரை இசைப்பூக்கள் பாடல் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கலாம்.

Imaigal Tv யின்

இசைப்பூக்கள் பாடல் நிகழ்ச்சி

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் . எமது இணையத்தளத்தின் 10 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறியவர்கள்‚ இளையவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடை பெற இருக்குக்கின்றது இசைப்பூக்கள் பாடல் நிகழ்ச்சி.

உங்கள் பிள்ளைகள் ‚ அல்லது உங்களுக்கு தெரிந்த பிள்ளைகளுக்கும் இதை அறியப்படுத்தி பாடும் பிள்ளைகளுக்கும் ஊக்கத்தை கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 

Imaigal Tv யின்

ஒரு மனிதன் செய்ய வேண்டியவை

 

1.இறைவனை வணங்குக

2.இனிமையாகப் பேசுக

3.உண்மையே பேசுக

4.சொல்வதையே செய்க

5.உயர்வையே எண்ணுக

6.செருக்கை அடக்குக

7.நல்லதை பேசுக

8.அன்பாக பேசுக

9.யோசித்து செய்க

10.சமயம்அறிந்து பேசுக

ஒரு மனிதனிடம் இருக்க வேண்டியவை

 

1.தோல்வியில் விடாமுயற்சி

2.துன்பத்தில் துணிவு

3.செல்வத்தில் தியாகம்

4.பதவியில் பணிவு

5.கோபத்தில் பொறுமை

 

7.அடக்கத்தில் எளிமை

8.உழைப்பில் விருப்பம்

9.பேச்சில் சிக்கனம்

10.கல்வியில் ஆர்வம்

11.கடமையில் பற்று

 

ஒரு மனிதன் செய்ய வேண்டியவை

 

1.இறைவனை வணங்குக

2.இனிமையாகப் பேசுக

3.உண்மையே பேசுக

4.சொல்வதையே செய்க

5.உயர்வையே எண்ணுக

6.செருக்கை அடக்குக

7.நல்லதை பேசுக

8.அன்பாக பேசுக

9.யோசித்து செய்க

10.சமயம்அறிந்து பேசுக

 

கவனிக்க ஏழு விடயங்கள்

 

கவனி உன் வார்த்தைகளை

கவனி உன் செயல்களை

கவனி உன் எண்ணங்களை

கவனி உன் நடத்தையை

கவனி உன் இதயத்தை

கவனி உன் முதுகை (பின்னாலுள்ளவர்கள்)

கவனி உன் வாழ்க்கையை

 

வழிகாட்டும் ஏழு விடயங்கள்

 

சிந்தித்து பேசவேண்டும்

உண்மையே பேசவேண்டும்

அன்பாக பேசவேண்டும்.

மெதுவாக பேசவேண்டும்

சமயம் அறிந்து பேசவேண்டும்

இனிமையாக பேசவேண்டும்

பேசாதிருக்க பழக வேண்டும்

 

நல்வாழ்வுக்கான ஏழு விடயங்கள்

 

மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்

பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்

பிறருக்கு உதவுங்கள்

யாரையும் வெறுக்காதீர்கள்

சுறுசுறுப்பாக இருங்கள்

தினமும் உற்சாகமாக வரவேற்க தயாராகுங்கள்

மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

12-06-18 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய சிந்தனை

ஆரோக்கியம்

 

 

அசைவ உணவுகளில் அதிகம் நன்மை தருவது மீன், உணவில் அடிக்கடி மீனைச் சேர்த்து வந்தால் எந்த நோயும் நெருங்காது என்கிறார்கள் மருத்துவர்கள்.

* அதிக புரதச் சத்துள்ள மீனில், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது பல்வேறு நோய்களில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.

 

கண் பார்வைக்கும் மீன் மிகவும் பயனளிக்கிறது. மீன் உணவில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளையைச் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

 

* தொடர்ந்து மீன் சாப்பிடுவதன் மூலம், வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் குறையும்

* ஞாபகசக்தித் திறன் குறைபாடு, நரம்புத் தளர்ச்சி நோய் போன்ற பல நோய்கள் குணமடையும்.

* இதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பைத் தருகிறது மீன் உணவு. மீன் எண்ணெயைச் சாப்பிடுவதால், ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவு குறையும்.

 

(Tunfisch) போன்ற மீன்களில் mercury அதிக அளவில் காணப்படுதால் 3 வயதில் இருந்து 14 வயது வரை இருக்கும் பிள்ளைகள் இதை தவிர்பது நல்லத என்பதை டென்மார்க் உணவு நிர்வாகம் கூறியிருக்கின்றார்கள்.

Mercury உள்ள மீன்களை காபிடுவதால் பிள்ளைகளின் மூலையின் வளர்ச்சியை பாதிக்கும்.

அதனால் 3 வயதுக்கு உற்பற்றவர்களும் இந்த மீன்களை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

 

 

 

கேள்விப் பாடல்

பாடல் வரி: ஜெரனிக்கா சேகர்

இசை : ஜெரனிக்கா சேகர்

மெட்டு: ஜெரனிக்கா சேகர்

 

இன்றைய தகவல்கள்

 

சிறுவயதில் பியானோ புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளை பயிற்சி பெறும் குழந்தைகள் வயதான காலத்திலும் நல்ல புத்திக் கூர்மையுடன் இருப்பதாக வல்லுனர்கள தெரிவிக்கிறார்கள். சாதாரண இசையை கற்காத குழந்தைகள் விட நன்கு இசையை கற்ற குழந்தைகள வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இசையை கற்கும் குட்டிக் குழந்தைகள் தங்களது சிந்தனைகளை பல முனைகளிலும் ஒரு சேர செலுத்துவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். காரணம் மூளையின் இடது வலது பாகங்களை ஒரு சேரப் பயன்டுத்தும் ஆற்றல் சாதாரணக் குழந்தைகளை விடவும் இசையை கற்ற குழந்தைகளுக்கு அதிகமாக இருப்பதாக வல்லுனர்களின் ஆராய்ச்சி சொல்கிறது.

இளவயதில் மேற்கொள்ளும் இசைப்பயிற்சி வயதான காலத்தில் மூளை நரம்புகளில் ஏற்படும் சவால்களை எதிர் கொள்ள உதவுகிறது. சிறுவயது இசைப்பயிற்சி மூளையை துடிப்புடன் வைத்திருக்க உதவுகிறது. இதனால் மற்றவர்களை விட இசையை கற்றவர்கள் அறிவு நுணுக்கத்துடன் செயல்படுவதைக் காண முடிகிறது என வல்லுனர்கள் கருத்து சொல்கிறார்கள்.

மனதுக்கு இதம் அளித்து பட்டதைக் குறைக்க உதவும் இசை ஆழ்ந்த தூக்கத்தை இரவில் பெறவும் உதவுகிறது. மெல்லிய இசை நரம்புகளை நெகிழ்வடையச் செய்து உடலுக்கு உற்சாகம் அளிக்கிறது. இது மட்டுமில்லாமல் மூளை நரம்புகள் மிகச் சிறப்பாக செயல்படவும் உதவும் இசையை குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும்.

 

தயக்கம் எனும் சிறு முள்ளை எடுத்தெறிந்து வாழ்ந்தால்

தன் திறமை வெளிப்படுத்த தயங்குமா உன் உள்ளம்

இந்த பாடலை கேட்டு விட்டு இந்த பாடலுக்கான விடையை எமது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

 

Email: imaigal2016@gmail.com

 

Phone number: 0045 98520129

 

 

 

Contact:

 

Email: imaigal2016@gmail.com

 

Phone number: 0045 98520129

 

அனைத்து அன்பான உறவுகளுக்கும் வணக்கம்

 

ஜெரனிக்காவின் பாடலுக்கு தொலைபேசி ஊடாக

வாழ்த்து சொன்னவர்களுக்கும் E-mail ஊடாக வாழ்த்து சொன்னவர்களுக்கும் நன்றிகள்

காற்றின் மொழி

போன உசுரு

கடவுள் தந்த அழகிய வாழ்வு

சொய் சொய்

ஒவ்வொரு பூக்களுமே

பம்பா நதிக்கரை

ஜந்து மலை வாசா

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

ஜெரனிக்கா சேகர் 3 வயதில் பாடிய பாடல்

 

ஜெரனிக்கா சேகர் பாடிய சினிமா பாடல்

ஜெரனிக்கா சேகர் பாடிய ஜயப்பன் பாடல்கள்

அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள்

ஜெரனிக்கா சேகர் பாடிய பொங்கல் பாடல்

ஜெரனிக்கா சேகர் பாடிய புது வருட பாடல்

பெரியார் இராசா கந்தசாமி அவர்கள் 2003 ம் ஆண்டு தன் தாய் தந்தை நினைவாக மாதகல் நகரில் வீர ஆஞ்சநேயர் ஆலயத்தை தன் சொந்த நிதியிலேயே கட்டி முடித்தார். இந்த ஆலயம் கிட்டத்தட்ட 4 கோடி ருபா செலவில் கட்டப்பட்டது.

இந்த ஆலயத்தை கட்டும் போது சிலர் நேர்த்திக்காக நிதி உதவி வழங்கினார்கள். அவர்களுடைய பெயர்களும் வழங்கப்பட்ட நிதித்தொகையும் கீழே குறிப்பிடப்படும்.பெரியார் கந்தசாமி அவர்கள் இந்த கோவிலை கட்டும்போது பெரும் மனவேதனைகளுக்கு மத்தியில் பாணகவெட்டி அம்மன் துணையுடனும் ஆஞ்சநேயர் ஐயப்பன் துணையுடனும் கட்டி முடித்தார்.

 

 

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்து காத்து வரும் தெய்வம் நல்லைக் கந்தப்பெருமான் என்பது யாவரும் அறிந்த பேருண்மை.

இம்மாநிலத்தில் புகழ்பூத்த ஒரு கிராமம் சங்கானை. இக்கிராம மக்கள் விநாயகர் வழிபாட்டில் மிக்க பக்தி சிரத்தை மிக்கவர்கள்.

இக்கிராமத்தில் இனிய இல்லறம் நடாத்தி வந்த தம்பதியினர் அமரர்கள் திரு.திருமதி ஆசை சின்னக்குட்டி தம்பதியினர்.

இத்தம்பதியினர் சிலகாலம் தங்கள் திருமணத்தின் பின்னர் மலேசியாவில் சென்று வாழ்ந்து வந்தனர்.

அங்கு இவர்கள் நல்ல இல்லறவாழ்வில் திருமதி. இராசம்மா தம்பிப்பிள்ளை திரு. இராசா ஆகியோர் இரு பிள்ளைச் செல்வங்களாகக் கிடைத்தனர்.

இத் தம்பதியினர் சிலகாலம் மலேசியாவிலும் சிலகாலம் இலங்கையிலும் வாழ்ந்து வந்தனர். திரு. இராசா அவர்கள் தனது இளமைக்காலக் கல்வியைச் சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லுரியில் பெற்றுக்கொண்டார். பின்னர் அரச உணவுக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தில் சில காலம் கடமையாற்றிக் கொண்டே விவசாயத்துறைக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்ந்து வந்தார்.

சங்கானை கிழக்கில் வாழ்ந்து வந்த அமரர் இராசா அவர்கள் மாதகல் கிழக்கில் திருமணம் செய்து கொண்டார். மாதகலில் அமரர்கள் திரு.திருமதி சிற்றம்பலம்

வள்ளிப்பிள்ளை தம்பதியினர் தம் புதல்வியார் பாக்கியம் தம்மைத் திருமணம் செய்து கொண்டார்.

மண்ணகத்தில்: 22-09-1938

 

விண்ணகத்தில்; 16-01-2015