கவிதை

அன்பின் உருவமாய் தரணியில் வாழ்ந்தார்

அன்னை போல் என்றும் எமை நெஞ்சில் வைத்தார்

ஆறாவது பிள்ளையென நான் நோயோடு பிறக்க

அப்பாவோ எனைக்காக்க தான் நின்று தவிக்க

 

எத்தனையோ வைத்தியர்கள் எனை வந்து பார்க்க

எவ்வளவோ வேதனைகள் அப்பாவை சேர

அத்தனையும் ஏற்று எனைக்காத்தார் அப்பா

அக்கறையாய் கண்ணை இமை காப்பது போல் காத்தார்

 

உழைப்பாலும் வான்போல உயர்ந்து நின்றார்அப்பா

சேவை செய்வதிலும் முன் நிற்பார் என்றுமே அப்பா

தன் கையால் யாவருக்கும் கொடுத்தவர்தான் அப்பா

தற் பெருமை இல்லாத தங்கம் தான் அப்பா

 

உன்னதமாய் இறைபணியை செய்து வாழ்வில் முடித்தார்

உயிர் இருக்கும் வரை தன்னால் இயன்றளவு செய்தார்

செல்வந்தனாய் இருந்தபோதும் எளிமையாக வாழ்ந்தார்

சென்ற இடம் எல்லாம் மதிப்போடு வாழ்ந்தார்

 

தொடக்கி வைத்தால் முடியும் வரை அயராது உழைப்பார்

தொண்டு செய்து வாழ்பவனை எப்போதும் மதிப்பார்

உண்மை நேர்மை உள்ளவர்க்கு அன்பான அப்பா

பொய் களவு செய்பவரை வெறுப்பார் என் அப்பா

 

எந்த இடத்தை கேட்டாலும் உடன் சொல்வார் அப்பா

அனைவரையும் தெரிந்த ஒரு மனிதர்தான் அப்பா

தாய் தந்தை தெய்வமென போற்றியவர் அப்பா

தாய் தந்தை ஞாபகமாய் ஆலயமும் அமைத்தார்

 

அவரோடு இருந்த என் நினைவுகள் மறையாது

அவரோடு நான் கதைத்த ஞாபகங்கள் அழியாது

என் அப்பா போல் எவரும் எனக்காக கிடையாது

என் அப்பா செய்த தொண்டு எப்போதும் அழியாது

இப்போதும் ஆலயத்தில் இருப்பார் என் அப்பா

எப்போதும் துணையாக இருப்பார் என் அப்பா

www.Imaigal.net

J.A.S.K

பிறக்கும் போது அழுது கொண்டு பிறக்கும் பிள்ளை பூமியில்

முதல் முறையாய் உடல் தனை பூமியிலே புரட்டுவர்

 

நாட்கள் கொஞ்சம் சென்ற பின்னர் நாலு காலில் நடப்பரே

நாளடைவில் தத்தி தத்தி சின்ன காலால் நடப்பரே

 

1‚2‚3 என்ற வருடங்கள் சென்றதும்

மெல்ல மெல்ல பெஞ்சிலினால் ஒற்றை முழுக்க கீறுவர்

 

5 வயது வந்தவுடன் தோலில் புத்தகம் கொண்டு

சிறுவர் பள்ளி துள்ளி துள்ளி சென்று வருவார்களே

 

புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் சிறுவர்களிற் கெல்லாம்

இலகுவான முறையில் கல்வி கற்பிக்கப்படுகுதே

 

பல படிப்பு பல வேலை இப் புலம்பெயர்ந்த நாட்டினில்

பக்குவமாய் படி ஏறி போனால் வாழ்வு வளம் பெறும்

 

படிப்புடனே பண்பை நாமும் கற்று வாழ வேண்டுமே

அந்த அந்த வயதிற்கேற்ப வாழப் பழக வேண்டுமே

 

துன்பங்கள் வாழ்வில் வருகின்ற போதிலும்

நம்பிக்கை மனதில் வைத்து வாழ்வை வளமாக்குவோம்

www.Imaigal.net

J.A.S.K

இருட்டின் நீளம் முடியும் வேளை

இதமாய் மலரும் காலை வேளை

 

பறவைகள் பாடி பறக்கும் வேளை

பல கோடி இன்பங்கள் கிடைத்திடும் காலை

 

தன் ஒளி கதிர்களை சூரியன் பரப்ப

மகிழ்வாய் மலர்களும் கதிர்களை வாங்க

 

புல்லின் மேலும் பனித்துளி தவழ

புதிதாய் மலர்ந்த மலர்களும் ஆட

 

ஆலய மணி மனதை பரவசப் படுத்த

ஆனந்தமான அந்த விடிகாலைப் பொழுது

 

விடியலில் காணும் யாவும் அழகே

இதை விபரிக்கும் வரியும் பெற்றிடும் அழகே

www.Imaigal.net

J.A.S.K

1 2 3 4 5 6 - Next

www.Imaigal.net

செயல் ஒன்று பாராட்டும் விதம் பொறுத்தே வளர்ந்து செல்லும்

செல்கிறதே மனம் அது பாராட்டின் வழிதனிலே

 

எதிர்பார்க்கும் பாராட்டின் அளவுதனை மனம் அதுவே

எப்போதும் மனம் பறந்திடுமே பாராட்டின் வழிதனிலே

 

குழந்தை பருவமது அதிகமாய் எதிர்பார்க்கும்

குறும்பாய் தான் செய்யும் செயலுக்கு பாராட்டு

 

படிக்கும் பிள்ளை எதிர்பார்க்கும்

சொந்தமாய் தான் செய்யும் செயலுக்கு பாராட்டு

 

ஆசிரியர் மனதினிலே என்றும் இருந்திடும்

தன் மாணவனின் உயர்வினிலே கிடைக்கும் அந்த பாராட்டு