சிறுவர்கள் பக்கம்

சிந்தனைகள்

 

பொது அறிவு

 

திருக்குறல்

 

உலக அதிசயங்கள்

 

நாடுகள்

 

சிறுவர் கதைகள் video

 

திருக்குறல் video

 

குழந்தைகளின் video

 

 

குழந்தைகள் வளரும் பண்புகள்

 

படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

கல்வி கற்றல் என்றால் என்ன?

 

புத்தகங்கள் வாசிப்பதன் அவசியம்

 

குழந்தைகளை பேசவைக்க

 

எந்த நேரம் படிப்பது சிறந்தது

புத்தகங்கள் வாசிப்பதன் அவசியம்

பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பது நல்ல விடயம் தான். அனாலும் அதே நேரத்தில் பிள்ளைகள் ஒர் இடத்தில் இருந்து அமைதியாக வாசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். புத்தகங்களும் வாசிப்புப் பழக்கமும் வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதியாகும். நல்ல வாசிப்புப் பழக்கமானது சிறு வயதிலேயே பிள்ளைகளிற்கு ஊட்டப்படுமானால் அது ஆயுள் முழுவதும் அவர்களைத் தொடர்ந்து வரும்.

கல்வி கற்றல் என்றால் என்ன?

 

கல்வி கற்றல் என்றால் என்ன? ஒரு பிள்ளை தன்னைச் சூழவுள்ள சூழலையும் உலகத்தையும் அறிதலே கல்வி கற்றல் ஆகும். ஒரு பிள்ளை எப்போது கல்வி கற்க ஆரம்பிக்கின்றது? அது தான் பிறந்த கணத்தில் இருந்தே கல்வி கற்க்க ஆரம்பிக்கின்றது. சாதாரண பாடசாலைக் கல்வியில் மொழி ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. சின்னஞ்சிறு குழந்தையால் கற்றலுக்காக மொழியை ஒரு ஊடகமாகப் பயன்படுத்த முடியாத பருவத்தில் அது தனது ஐந்து புலன்களையுமே கற்றலுக்காக அதாவது சூழலை அறிவதற்க்காகப் பயன்படுத்துகின்றது. உதாரணமாக ஒரு ஐந்து மாத வயதுடைய பிள்ளைக்கு ஒரு விளையாட்டுப் பொருளைக் கொடுக்கும் போது, அது அதனைத் தொட்டு, முகர்ந்து, சுவைத்து, பார்த்து, அதிலிருந்து வரும் ஒலியைக் கேட்டு அப்பொருளை ஆராச்சி செய்கின்றது. குழந்தை வளர வளர அதனுடைய சூழலின் பரப்பும் அதிகரிக்கின்றது. அது ஆராச்சி செய்யவேண்டிய பொருட்களின் அளவும் அதிகரிக்கின்றது

 

 

 

• படிக்கும் இடம் சிறியதாக இருந்தாலும், எந்த வகையிலும் கவனத்தை திசை திருப்பக் கூடியதாக இருக்கக் கூடாது.

 

• பகலிலும், இரவிலும் போதுமான வெளிச்சம் உள்ள இடமாக இருக்க வேண்டும்.

 

• நல்ல காற்று வசதி உள்ள இடமாக இருக்க வேண்டும்.

 

• படிக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

 

• உங்களது அறையில் தொலைக்காட்சிப்பெட்டி, வானொலிப் பெட்டி, தொலைபேசி போன்றவைகள் இல்லாமல் இருந்தால், கவனம் சிதறாது.

 

• நீங்கள் படிப்பதற்குத் தேவையான அனைத்து புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் பிற பொருட்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். பொருட்களைத் தேடுவதற்காக அதிக நேரத்தைச் செலவழிக்காதீர்கள்.

 

• படிக்கும் இடத்தில் படுக்கை இருப்பதைத் தவிர்க்கவும். படுக்கை இருந்தால் படுத்துக் கொண்டே படிக்கலாம் என்று எண்ணம் தோன்றும்.

 

• குழந்தைகள், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நீங்கள் படிக்கும் இடத்திற்கு வந்து போகும் இடமாக இருக்கக் கூடாது.

 

• இரவில் குடிப்பதற்கு படிக்கும் அறையிலேயே தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.

 

• காலையில் எழுந்தவுடன் உங்கள் அறையிலேயே சிறிது நேரம் யோகா அல்லது தியானம் போன்றவற்றில் ஈடுபட்டால் நினைவு திறன் அதிகரிக்கும்.

குழந்தைகளை பேசவைக்க

குழந்தைகளை பேசவைக்க முதலில் நாம் அவர்களோடு நிறைய பேசவேண்டும். அவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது வார்த்தைகளை சொல்லிக்கொடுக்கவேண்டும். பசியோடு இருக்கும்போதோ அல்லது தூக்கம்வரும் நேரத்திலோ புது வார்த்தைகளை சொல்லிக்கொடுக்கக்கூடாது. வெளியில் எங்காவது கூட்டிசென்றுவிட்டு வரும்வழியில் நன்றாக பேச்சுக்கொடுத்துக்கொண்டே வரவேண்டும். அங்கு பார்த்தவைகளை பற்றி கேள்வி கேட்டு பதில் சொல்லவைக்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் வெளியில் எங்காவது விளையாட கூட்டிசென்றால் சந்தோஷப்படுவார்கள். அந்த நேரத்தில் பேசச்சொல்லிக்கொடுங்கள். பொதுவாக ஆண்குழந்தைகள் லேட்டாத்தான் பேசுவார்கள் என்று சொல்வார்கள். நீங்கள் குழந்தையோடு நிறைய பேசவேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

எந்த நேரம் படிப்பது சிறந்தது

அதிகாலை என்பது குழந்தைகள் படிப்பதற்கு மிகச்சிறந்த நேரம். அந்நேரம் படிப்பதால் பாடங்களை எளிதில் குழந்தைகளால் உள்வாங்கிக்கொள்ள முடியும்.

 

''பள்ளி, ட்யூஷன், ஆசிரியர்கள், பாடங்கள் என காலையில் இருந்து அடுத்தடுத்த கல்வி நேரத்தை கடந்துவந்து சோர்வான, இறுக்கமான மனநிலையில் இருக்கும் குழந்தைகளால் மாலை மற்றும் இரவு நேரத்தில் சரியாக படிக்க முடியாது. அதனால் மாலை நேரங்களில் எழுத்து வேலைகள் இருந்தால் அப்போது அதனை குழந்தைகளைச் செய்யவைக்கலாம். பின்னர், அவர்களின் உடம்புக்கு ஓய்வு தேவைப்படும். அதுதான், உயர்ந்த தியான நிலையான தூக்கம்.

 

தூங்கி எழுந்ததும், குழந்தைகளின் மனமும் உடலும் நல்ல புத்துணர்ச்சியுடன் இயங்கும். அப்போது மூளையும் முழுமையான, புத்துணர்வான ஆற்றலுடன் இயங்க ஆரம்பிக்கும். முந்தைய நாள் பிரச்னைகள், கவலைகள் மறந்துபோயிருக்கும். புதிய எண்ண ஓட்டங்கள் தொடங்கும் அந்த வேளையில் படிக்கும் பாடங்கள் குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும். நினைவில் நிற்கும்.

 

இரவில் குழந்தைகள் விரைவாக தூங்கச் செல்லும்போது, காலையில் சீக்கிரமே எழுந்துவிடுவார்கள். அப்படி எழுந்து காலையில் 5 - 7.30 மணி வரை அவர்கள் படிப்பது மிகுந்த பலன் தரும். அப்படிப் படிக்கும்போது அறைக்குள், வீட்டுக்குள் முடங்கிப் படிப்பதைவிட, கிராமப்புற மாணவர்கள் வீட்டுத் திண்ணையிலும், நகர்ப்புற மாணவர்கள் பால்கனி, மொட்டைமாடியிலும் என, வெளிக்காற்று பெற்றுக்கொண்டே படிக்கும்போது கிடைக்கும் புத்துணர்வு, பாடங்களை விரைவில் மனனம் செய்யவைக்கும். கூடுதலாக, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதிகாலையில் நல்ல ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

விடுகதைகள்

விடுகதைகள்

 

1.வருவது தெரியும் போவது தெரியாது அது என்ன?

புகை

2.தண்ணீரிலே தாமரைப் பூ தள்ளாடுதே அலைகளிலே அது என்ன?

படகு

3.வெட்டி வெட்டி எரியும் எங்கள் வீட்டு விளக்கு அது என்ன?

மின்னல்

4.நெட்டி இல்லாத வட்ட இலை அது என்ன?

அப்பளம்

5. வட்ட வட்ட குயில்களாம் வாயில்லாத குயில்களாம்

சுற்றுகின்ற போதிலே சுகமான ராகமாம் அது என்ன?

இசைத்தட்டு