பொது அறிவு

www.Imaigal.net

பொது அறிவு

கல்வி தொடர்பாக கொண்டாடப்படும் தினங்கள் எவையென்று தெரியுமா?

 

ஜனவரி 23 - தேசிய படிக்கும் தினம்.

 

பிப்ரவரி 21 - தாய்மொழி தினம்.

 

பிப்ரவரி 28 - அறிவியல் தினம்

 

மே 11 - தேசிய தொழில்நுட்ப தினம்

 

ஜூலை 1 - மருத்துவர் தினம்

 

ஜூலை 15 - கல்வி முன்னேற்ற தினம்

 

ஆகஸ்ட் 12 - தேசிய நூலக தினம்

 

செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம்

 

செப்டம்பர் 8 - அனைத்துலக எழுத்தறிவு நாள்.

 

செப்டம்பர் 15 - பொறியாளர் தினம்

 

நவம்பர் 11 - தேசிய கல்வி தினம்.

ஒரு தேனியால் எத்தனை முறை கொட்ட முடியும்?

ஒரு முறை

 

தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறனைக் கொண்டதாகும். தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும்.தேனீக்களின் வாழ்நாள் 28 முதல் 35 நாட்கள் ஆகும்.தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப் படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.

சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும்?

15 ஆண்டுகள்

 

கடலுக்குள் ஓடுகள் பெற்றுள்ள உயிரினங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் ஒன்றுதான் முத்துசிப்பி. சிப்பிகளிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. 2.5 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. . சிப்பிகளின் ஓடு இரு பகுதிகளானது. இரு பகுதிகளும் ஓரத்தில் ஓரிடத்தில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அதன் ஓடுகள் திறந்தே இருக்கும். நீரில் இருக்கும் ஆக்சிஜனை கிரகிக்கிறது சிப்பி. அதன் பருவ காலத்தில் கோடிக்கணக்கான முட்டைகளை இட்டுத் தள்ளும்.இரண்டு வாரங்களில் நீந்த தொடங்கும். ஐந்து ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடையும். மிக நல்ல முத்துக்கள் பாரசீக வளைகுடாவில் தான் கிடைக்கிறது. அரேபியர்கள் கடலில் மூழ்கி முத்து குளிப்பதையே முக்கிய தொழிலாக கொண்டிருக்கின்றனர். சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களிலும் முத்துக்கள் கிடைக்கின்றன.

 

விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது?

ஜப்பான்

ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது?

1920

 

ஒலிம்பிக் போட்டியைக் குறிக்கும் சின்னமாக ஒன்றுடன் ஒன்று இணைந்த 'ஐந்து வண்ண வளையங்கள்' உள்ளன. நீலம், கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை என ஐந்துவகையான வண்ணங்களில் அமைந்துள்ளன. இந்த வளையங்கள் ஒவ்வொன்றும் உலகிலுள்ள ஒவ்வொரு கண்டத்தைக் குறிக்கும். ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றைக் குறிக்கின்றன. அண்டார்டிகாவில் மனிதர்கள் வசிப்பதில்லை என்பதால் அதை சேர்க்கவில்லை. இரு அமெரிக்க கண்டங்களை ஒன்றாக்கி விட்டனர். இந்த ஐம்பெருங் கண்டங்களையும், அவற்றை சேர்ந்த வீரர், வீரங்கனைகள் ஒன்று கூடுவதையும் குறிக்கின்றன.

சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன்

புதன்

புதன் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகமாகும்.

இது மிகச்சிறிய கிரகமும் அகும்.

இதற்கு இயற்கைத் துணைக்கோள்கள் கிடையாது.

இதன் புவியமைப்பு அம்சங்களுக்காக பெயர் பெற்றதாகும்.

அழுத்தமான எரிமலைவாய்களில் தொங்கும் கூடல் வாய்கள் அமைந்துள்ளன.

இது மையப்பகுதியில் இரும்பு உலோகம் ஏராளமாக கொண்டிருக்கும்.

புதனைச் சூரியன் கடக்கும் இந்நிகழ்வானது நூற்றாண்டுக்கு 13 முறைகள் இடம்பெறுகின்றன.

இதனை இடைமறிப்பு என்று கூறுகின்றனர்.

 

இதனடிப்படையில்இ 2006 ஆம் ஆண்டு சூரியனைக் கடந்து சென்ற புதன் கிரகம் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த வருடம் மே மாதம் 9 திகதி

சூரியனைக் கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்து இந்நிகழ்வு 2019 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதியும் 2032 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதியும் தான் புதன்கிரகம் சூரியனைக் கடக்கும் என்று சொல்லப்படுகின்றது.