pothu arivu-04

www.Imaigal.net

பொது அறிவு

18 வயதில் மருத்துவராகும் வாய்ப்பு பெற்ற அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்

25-05-16

பார்வை தரும் பன்றிகள்: மருத்துவ உலகின் அடுத்த புரட்சி

 

கடந்த சில பத்தாண்டுகளில் உலகின் விஞ்ஞான கேந்திரமாக சீனா வளர்ந்திருக்கிறது. இதில் அதன் மருத்துவ ஆய்வுகள் முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.

கண்பார்வைக் குறைபாடு சீனாவில் மிகப்பெரும் பொதுசுகாதார பிரச்சனையாக இருக்கிறது.

அங்கே எண்பது லட்சம் பேருக்கு கண்பார்வையில்லை. ஆனால் ஆண்டுக்கு ஐயாயிரம் கார்னியா மாற்று சிகிச்சைகள் மட்டுமே நடக்கின்றன.

தற்போது சீன விஞ்ஞானிகள் இதற்கு வித்தியாசமான புதியதொரு சிகிச்சையை உருவாக்கியிருக்கிறார்கள்.

சீனாவின் உடலுறுப்பு பற்றாக்குறைக்கு வித்தியாசமானதொரு தீர்வாக பன்றிக் கண்களின் ஒரு பகுதி மனிதர்களுக்கு பொருத்தப்படுகிறது.

வுய் பிங் வே என்கிற நோயாளிக்கு பரீட்சார்த்த முறையில் பன்றியின் கார்னியா பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

வுய் பிங் வேயின் ஒரு கண்ணில் கார்னியா எனப்படும் கருவிழிப்படலத்தில் தொற்று ஏற்பட்டதால் பார்வை பறிபோனது.

இன்னமும் தொடர் மருத்துவமனைக் கண்காணிப்பில் இருக்கும் வுய் பிங் வேயின் அறுவை சிகிச்சைக்குப் பின்னான பரிசோதனை முடிவுகள் நல்லபடியாக வந்திருக்கின்றன.

இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அவர் தெளிவாக பார்க்க முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த மாற்று சிகிச்சையை உருவாக்க தமது நிறுவனத்துக்கு பத்து ஆண்டுகள் பிடித்ததாக கூறுகிறார் சீன மீளுருவாக்க மருத்துவ நிறுவனத்தலைவரும் மருத்துவருமான ஷாவ் செங்கங்.

“மனித கார்னியாவுக்கு மாற்றாக பல விலங்குகளை பரிசீலித்தோம். ஆடு, நாய், பன்றி பசுவெல்லாம் முயன்றோம். இதில் பன்றியின் கார்னியாவே மனிதனுக்கு பொருந்துவதை கண்டோம்", என்கிறார் அவர்.

முதலில் பன்றியின் நோய் மனிதருக்கு பரவாமல் தடுக்க பன்றியின் கார்னியாவிலிருந்து வைரஸ் பாக்டீரியாக்கள் நீக்கப்படும்.

பன்றியின் செல்களும், மரபணுக்களும் கூட சுத்தமாக அகற்றப்படும். எஞ்சியுள்ள கார்னியா கட்டமைப்பு மட்டும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்.

இந்த சிகிச்சை முறையின் நீண்டகால ஆபத்து குறித்து பரிசீலிக்காமல் சீனா வேகமாக அவசரகதியில் செல்வதாக சிலர் கவலைப்படுகிறார்கள்.

ஆனால் விலங்குகளின் உடலுறுப்புக்களை மனிதருக்கு பொருத்துவதில் அதிகரிக்கும் உலக அளவிலான ஆர்வத்தைப் பார்த்தால் இது வெறும் ஆரம்பம் என்றே தோன்றுகிறது.

 

 

பொதுவாகவே பிறந்த குழந்தைகள் தொடர்ச்சியாக அழுது கொண்டிருக்கும், எதற்காக அழுகின்றது என்று உங்களுக்கு தெரியுமா?

 

இதோ அதற்கான காரணம்,

 

ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத் துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய் மறந்து, அந்த இதயத் துடிப்பின் இசையில் உறங்கிக் கொண்டிருக்குமாம்.

 

இதயத் துடிப்பு திடீரென கேட்காமல் போவதால் தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.

 

அந்த சமயத்தில் குழந்தையை தாய் தூக்கி நெஞ்சில் அணைத்துக் கொள்ளும் போது மீண்டும் இதயத் துடிப்பு கேட்பதால் அழுகையை நிறுத்தி விடுமாம்

01-06-16

உலகின் மிக நீளமான ரயில் சுரங்கம் திறக்கப்பட்டது

 

உலகின் நீளமான மற்றும் ஆழமான ரயில் சுரங்கத்தை ஆல்ப்ஸ் மலையின் கீழாக சுவிட்சர்லாந்து நிர்மாணித்துள்ளது.

சுமார் இருபது வருடகால நிர்மாணத்தின் பின்னர் இன்று அது உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.

57 கிலோமீட்டர் நீளமான இந்த கொதார்ட் சுரங்கம் வடக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவை இணைக்கும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பத்து லட்சம் லாறிகள் ஒரு வருடத்தில் மலைப்பாதைகளில் பயணிப்பதற்கு மாற்றான இந்த ரயில் சுரங்கம் ஒரு புரட்சியாக பார்க்கப்படுகின்றது.

 

 

 

அமெரிக்க வாழ் இந்திய சிறுவனுக்கு 18 வயதிலேயே மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

கேரளாவை சேர்ந்த பிஜு ஆபிரகாம்-தஜி ஆபிரகாம் ஆகியோரின் மகன் தனிஷ்க் ஆபிரகாம் 12 வயதுக்குள் 3 பட்டங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

 

அமெரிக்காவின் சிறந்த கல்விமான்களை உறுப்பினர்களாக கொண்ட மிக முக்கிய திறன் மையமான ‘மென்சா’வில் 4 வயதிலேயே ஆபிரகாமை இவனது பெற்றோர் சேர்த்துவிட்டனர்.

 

அவனுக்கு 7 வயது முடிவடைவதற்குள் வீட்டிலேயே பள்ளிக்கல்வியை கற்பித்து விட்டனர்.

 

இதனால் அவன் 2014-ம் ஆண்டு அதாவது தனது 10-வது வயதிலேயே மாநில தேர்வு எழுதி உயர்நிலைப்பள்ளி டிப்ளமோவுக்கு இணையான பட்டம் பெற்று விட்டான்.

 

அதன் பிறகு சக்ரமென்டோவில் உள்ள அமெரிக்கன் ரிவர் கல்லூரியில் சேர்ந்து படித்த அவன் கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் கணிதம், அறிவியல் மற்றும் வெளிநாட்டு மொழிக்கல்வி ஆகிய 3 பாடத்திலும் பட்டம் பெற்று சாதனை படைத்தான்.

 

அமெரிக்காவில் 11 வயதிலேயே பட்டதாரியான தனிஷ்க்கின் அபார சாதனை ஜனாதிபதி ஒபாமாவின் கவனத்தை ஈர்த்தது. இதைத்தொடர்ந்து அவர் தனிஷ்க்குக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து கடிதம் அனுப்பி வைத்தார்.

 

தற்போது 12 வயதாகும் தனிஷ்க் மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்து உள்ளான்.

 

இதுகுறித்து ஆபிரகாம் கூறியதாவது, 18 வயதில் நான் மருத்துவராகிவிடுவேன்,சிறு வயதில் இருந்தே எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்பேன், அதுதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது

 

எதிர்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக விரும்புவதே எனது ஆசை என கூறியுள்ளான்.

 

 

24-05-16