pothu arivu 03

www.Imaigal.net

பொது அறிவு

விமானப் பயணிகளுக்கு உதவும் ரோபோ

20 மே 2016

ஸ்மார்ட் ஃபோன் எனப்படும் நவீன கைப்பேசிகள், நவீன கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட கருவிகளை கையாள்வதற்கு, உரையாடல் வடிவிலான இயக்கி ஒன்றை கூகுள் அறிமுகப்படுத்துகிறது. தகவல்களை அறிவதற்கும், மீடியா இயக்கத்துக்கும், சினிமா டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் கூகுள் உதவியாளரைப் பயன்படுத்தலாம். பயன்பாட்டாளருக்கும், மென்பொருளுக்கும் இடையே உரையாடல் வடிவில் தகவல்களைப் பரிமாறி, பணிகளை முடிக்கலாம். அமேஜானின் எகோ என்ற இன்னொரு மென்பொருளுக்கு போட்டியாக இது இருக்கும்.

 

 

 

தாய்வான் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜனநாயக முற்போக்கு கட்சியின் சாய் இங்-வென் பதவியேற்றுள்ளார்.

 

சீனாவில் நடந்த உள்நாட்டு போரின் காரணமாக கடந்த 1949 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து தாய்வான் பிரிந்து சென்று புதிய நாடாக உருவெடுத்தது.

 

ஆனால் தாய்வான் ஒரு சுயாட்சிப் பிரதேசமாக இருந்தாலும்கூட பெரும்பாலான நாடுகள் அதனை அங்கீகரிக்க மறுத்துவருகின்றன.

 

இந்நிலையில் சீனாவின் அண்டை நாடாக இருந்து வரும் தாய்வானில் கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது.

 

இதில், எதிர்க்கட்சியான ஜனநாயக முற்போக்குக் கட்சியைச் சேர்ந்த 59 வயதான சாய் இங்-வென் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

 

ஆளுங்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட எரிக் சு தோல்வியடைந்தார். மேலும், தோல்வியை ஒப்புக்கொண்டு தனது கட்சி தலைமை பொறுப்பிலிருந்தும் விலகினார்.

 

இந்த தேர்தலையும், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய நிகழ்வுகளையும் சீனா உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், தாய்வானின் முதல் பெண் ஜனாதிபதியாக சாய் இங்-வென் பதவியேற்றார்.

 

ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள தேசியக் கொடியின்முன் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தைவான் மக்கள் தங்கள் வாழ்க்கையின் நெறிமுறையாக உள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை காக்க உறுதி பூண்டுள்ளனர் என்று கூறினார்.

 

சீனாவுடன் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க தாய்வான் உதவியாக இருக்கும் என தெரிவித்தார். மேலும், இருநாட்டு மக்களின் நலனுக்காக பழைய வரலாறுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நேர்மறையான பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

 

நீண்ட காலமாக சீனாவால் அங்கீகரிக்கப்படாமல் உள்ள தைவானை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. ஒரு நாள் தாய்பூமியுடன் இணைக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் படைபலத்தை பிரயோகித்து இணைப்போம் என்றும் சீனா மிரட்டல் விடுத்து வருகிறது.

 

நடைமுறையில் தாய்வான் தனி நாடாக இருந்தாலும், அதனைத் தங்களது ஒருங்கிணைந்த பகுதியாக இப்போதும் சீனா கருதி வருவது குறிப்பிடத்தக்கது

சூரிய சக்தியால் உலகைச் சுற்றும் விமானம்

21-05.16

 

சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்று அமெரிக்காவின் நடுமேற்கு பகுதியிலிருந்து உலகைச் சுற்றும் இறுதிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

 

சோலார் இம்பல்ஸ் இரண்டு என்ற இந்த விமானம் உலகைச் சுற்றி வருவதற்கு எடுக்கின்ற கடைசிக்கட்ட முயற்சி இதுவாகும்.

ஒக்லஹோமா மாகாணத்தின் ஒகியோவிலுள்ள டேடனிலிருந்து இந்த விமானத்தின் 12வது பயணம் தொடங்கியுள்ளது.

இந்த பயணத்திற்கு 17 மணி நேரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி

23-05-2016

சீனாவில் இலகுவில் சென்றடைய முடியாத ஒரு இடத்தில் உலகின் மிகப்பெரும் தொலைநோக்கி நிர்மாணிக்கப்படுகின்றது.

அரை கிலோ மீட்டர் பரந்த அதன் டிஷ், இதுவரையில் உள்ள தொலைநோக்கிகளைவிட இரு மடங்கு பெரியது.

முன்னெப்போதும் இல்லாத அளவு ஆழமாக பேரண்டத்தை ஆராயும் வாய்ப்பை இது விண் ஆய்வாளர்களுக்கு கொடுக்கும்.