புத்தகங்கள் வாசிப்பதன் அவசியம்

 

www.Imaigal.net

புத்தகங்கள் வாசிப்பதன் அவசியம்

பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பது நல்ல விடயம் தான். அனாலும் அதே நேரத்தில் பிள்ளைகள் ஒர் இடத்தில் இருந்து அமைதியாக வாசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். புத்தகங்களும் வாசிப்புப் பழக்கமும் வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதியாகும். நல்ல வாசிப்புப் பழக்கமானது சிறு வயதிலேயே பிள்ளைகளிற்கு ஊட்டப்படுமானால் அது ஆயுள் முழுவதும் அவர்களைத் தொடர்ந்து வரும்.

வாசிப்பு ஒரு முக்கியமான திறன் களைக் கொண்ட ஒரு செயன் முறையாகும். அதாவது சிந்தித்தல், ஆராய்தல், காரணம் கண்டறிதல், கற்பனை செயதல் என்பவற்றுடன் நியாயம் கண்டறிதல் போன்றவற்றை உள்ளடக்கும்.

 

வாசிப்பின் நோக்கம்

சந்தேகம், மகிழ்ச்சி, பொழுதுபோக்கு,

ஓய்வுக்காக வாசித்தல்

தகவல் தேவைக்காக வாசித்தல்

அறிவுக்காக அறிவைத் தேடி

வாசித்தல்

 

மேற் கூறப்பட்ட இரண்டோ, மூன்றோ காரணங்களுக்காகவும் ஒருவர் வாசிக்கலாம். வாசிப்பு என்பது ஒரு மகிழ்ச்சிகரமானதும் சுவாரஸ்யமானதுமான ஒரு செயற் பாடாகும். வாசிப்பு ஒரு முக்கியமான திறனாகும். அது பிள்ளைகள் வாழ்க் கையில் வெற்றி பெறுவதற்கான ஓர் ஆயுதம் எனறு கூறலாம்.ஒரு பிள்ளை வாசிப்பது குறைவாக இருந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டியதும் அதைத் தீர்த்து வைக்க வேண்டியதும் ஆசிரியரினதும் பெற்றோரினதும் கடமையாகும்.

 

வாசிப்பின் பயன்கள்

என்று மொழி உருவானதோ அன்றே வாசிப்புப் பழக்கமும் மனிதர்களிடையே உருவானது. இந்தப் பூவுலகில் தோன்றிய அறிஞர்கள், மாமேதைகள் அனைவருமே

வாசிப்புப் பழக்கம் மூலம் உருவானவர்களே. 'சிறந்த புத்தகம் சிறந்த நண்பர்கள்' என்று கூறுவார்கள். ஆம், எமது ஓய்வு நேரங்களில் நாம் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாமும் இவ்வுலகில் ஒரு மாமேதையாகலாம் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

 

நாம் சிறுவயது முதலே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஓய்வு நேரங்களில் சிறந்த புத்தகங்களை நாம் வாசிப்பதால் நமது அறிவு விருத்தியடைவது மாத்திரமல்லாது ஓய்வு நேரத்தையும் பயனுள்ளதாக்கிக் கொள்ள முடியும். "நண்பர்கள் பலர் நமக்குத் துன்பம் நேரும் போது நம்மை விட்டுப் பிரிகின்றனர். ஆனால், எச்சந்தர்ப்பத்திலும் நம்மை விட்டுப் பிரியாத நண்பர்கள் புத்தகங்களே" என்கிறார் ஒரு அறிஞர்.

 

உண்மையிலேயே புத்தகம் என்பது காரிருளில் செல்பவர்களுக்குப் பேரொளியாகவும் வழி தவறியவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் திகழும். எப்போதென்றால் புத்தகம் வாசிக்கப்பட்டால் மாத்திரமே. புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதற்காக் தேவையற்ற புத்தகங்களையெல்லாம் வாசித்தல் கூடாது. மாறாக, எமக்குத் தேவையான, தகுதியான புத்தகங்களைத் தெரிந்தெடுத்து வாசிக்க வேண்டும். வாசிப்புப் பழக்கத்தால் எமது அறிவூற்று பெருக்கெடுக்கு. எமக்குத் தகுதி வாய்ந்த புத்தகங்களைத் தெரிவு செய்வதற்கு நாம் தெரிந்திருக்க வேண்டும். அறிவியல் நூல்கள், மாமேதைகளின் சரித்திர நூல்கள், சமய சம்பந்தப்பட்ட நூல்கள் என்பன எமது அறிவுப் பசிக்குத் தீனி போடுவதாய் அமைய வேண்டும்.

 

அன்று பல்வேறு துறைகளில் அறிஞர்கள் உருவாகினாலும் அவர்களுக்கு வாசிப்பதற்குப் போதிய நூல்கள் காண்ப்படவில்லை. ஆனால், இன்றோ வாசிப்பதற்கு இலட்சக்கணக்கான புத்தகங்கள் குவிந்து கிடப்பினும் அனேகர் அவற்றை உதாசீனப்படுத்துகின்றனர். அன்று புத்தகம் இல்லாமல் நாம் அழுதோம் ; இன்றோ 'என்னை வாசிப்பதற்கு யாரும் இல்லையே' என்று புத்தகங்கள் ஏங்குகின்றன. அந்தளவுக்கு இன்று புத்தகங்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறியிருக்கின்றன. புத்தகத்தின் மகிமையை அனேகர் உணர்ந்தபாடில்லை. இன்று பெரும்பாலானோர் தமது ஓய்வு நேரத்தில் வீண் விளையாட்டுக்களிலும் கேளிக்கைகளிலுமே ஈடுபடுகின்றனர். பாடசாலை நேரங்களில் மட்டுமே படிப்பது ; மற்றைய நேரங்களில், மற்றைய இடங்களில் வீண்கூத்துக்களில் ஈடுபடுவது என்று இன்றைய இளம் சமுதாயத்தினர் தமது வாழ்க்கையை வகுத்துள்ளனர்.

 

இந்நிலை மாற வேண்டும். வாசிப்பின் பயனை இவ்வுலகிலுள்ள அனைவரும் உணர வேண்டும். நூல்கள், நூலகங்களில் தூசு படிந்து இருக்கக் கூடாது. வீடுகளில் புத்தகங்கள் அலங்காரப் பொருளாகவன்றி அறிவைப் பெறும் பொருளாக மாற வேண்டும். இவை அனைத்தும் நிகழ வேண்டுமாயின் மானிடர்களின் உள்ளத்தி9ல் அறிவுத் தாகம் உணரப்பட வேண்டும்.

 

எனவே, 'இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்' என்ற கூற்றுக்கேற்ப மாணவர்கள் இந்த வாசிப்புப் பழக்கத்தைக் கூட்டிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

'வாசிப்பு மனிதனைப் பூரணமாக்குகிறது'

எனவே, இவ்வுலகிலுள்ள அனைவரும் ஓய்வு நேரங்களில் வாசிப்புப் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்வதன் மூலம் நாமும் ஒரு பூரண மனிதராக வாழ முயற்சிப்போமாக

சிந்தனைகள்

 

பொது அறிவு

 

திருக்குறல்

 

உலக அதிசயங்கள்

 

நாடுகள்