குழந்தைகளின் குறட்டையினால் இருக்கும் ஆபத்துக்கள்

குழந்தைகளுக்கு இசையின் பங்களிப்பு

 

சிறுவயதில் பியானோ புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளை பயிற்சி பெறும் குழந்தைகள் வயதான காலத்திலும் நல்ல புத்திக் கூர்மையுடன் இருப்பதாக வல்லுனர்கள தெரிவிக்கிறார்கள். சாதாரண இசையை கற்காத குழந்தைகள் விட நன்கு இசையை கற்ற குழந்தைகள வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இசையை கற்கும் குட்டிக் குழந்தைகள் தங்களது சிந்தனைகளை பல முனைகளிலும் ஒரு சேர செலுத்துவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். காரணம் மூளையின் இடது வலது பாகங்களை ஒரு சேரப் பயன்டுத்தும் ஆற்றல் சாதாரணக் குழந்தைகளை விடவும் இசையை கற்ற குழந்தைகளுக்கு அதிகமாக இருப்பதாக வல்லுனர்களின் ஆராய்ச்சி சொல்கிறது.

இளவயதில் மேற்கொள்ளும் இசைப்பயிற்சி வயதான காலத்தில் மூளை நரம்புகளில் ஏற்படும் சவால்களை எதிர் கொள்ள உதவுகிறது. சிறுவயது இசைப்பயிற்சி மூளையை துடிப்புடன் வைத்திருக்க உதவுகிறது. இதனால் மற்றவர்களை விட இசையை கற்றவர்கள் அறிவு நுணுக்கத்துடன் செயல்படுவதைக் காண முடிகிறது என வல்லுனர்கள் கருத்து சொல்கிறார்கள்.

மனதுக்கு இதம் அளித்து பட்டதைக் குறைக்க உதவும் இசை ஆழ்ந்த தூக்கத்தை இரவில் பெறவும் உதவுகிறது. மெல்லிய இசை நரம்புகளை நெகிழ்வடையச் செய்து உடலுக்கு உற்சாகம் அளிக்கிறது. இது மட்டுமில்லாமல் மூளை நரம்புகள் மிகச் சிறப்பாக செயல்படவும் உதவும் இசையை குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் எத்தகைய சூழ்நிலையில் எத்தகைய பண்புகள் வளரும்?

 

தன்னைப் பற்றிய விமரிசனத்தில் வளரும் குழந்தை: மற்றவர்களைக் கண்டனம் செய்யக் கற்றுக் கொள்கிறது.

* பகைமைச் சூழலில் வளரும் குழந்தை: பிறருடன் சண்டையிடக் கற்றுக் கொள்கிறது.

* பயத்தில் வளரும் குழந்தை: கவலைப்பட கற்றுக் கொள்கிறது.

* பச்சாத்தாபச் சூழலில் வளரும் குழந்தை: தனது செயல்களை நினைத்து வருந்தக் கற்றுக் கொள்கிறது.

* பொறாமைச் சூழலில் வளரும் குழந்தை: குற்ற உணர்வு கொள்ளக் கற்றுக் கொள்கிறது.

* பாராட்டப்பட்டு வளரும் குழந்தை: மன உறுதியைச் சொந்தமாக்கிக் கொள்கிறது.

* புகழ்ச்சிகளால் நிறைக்கப்படும் குழந்தை: மற்றவர்களைப் புகழ்வதில் பெருமிதம் கொள்கிறது.

* சகிப்புத் தன்மையில் வளர்க்கப்படும் குழந்தை: பொறுமையை கற்றுக் கொள்கிறது.

* பிறரால் ஏற்றுக் கொள்ளப்படும் குழந்தை: பிறரை அன்பு செய்யக் கற்றுக் கொள்கிறது.

* உற்சாகப்படுத்தப்படும் சூழலில் வளர்ந்த குழந்தை: தானாகக் எதையும் ஆர்வமுடன் கற்றுக் கொள்கிறது.

* முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட குழந்தை: குறிக்கோளோடு செயல்படக் கற்றுக் கொள்கிறது.

* பாகுபாடற்ற சூழலில் வளர்ந்த குழந்தை: நீதியுணர்வில் நிலைத்து நிற்கக் கற்றுக் கொள்கிறது.

* நேர்மைச் சூழலில் வளர்ந்த குழந்தை: உண்மையின் பாதையில் விலகாதிருக்க கற்றுக் கொள்கிறது.

* பாதுகாப்பான சூழலில் வளரும் குழந்தை: தன்னிலும் பிறரிலும் நம்பிக்கை வைக்கக் கற்றுக் கொள்கிறது.