கோயில்கள்

விநாயகர் பாடல்கள்

...

அம்மன் பாடல்கள்

...

ஆஞ்சநேயர் பாடல்கள்

...
...

ஜயப்பன் பாடல்கள்

Imaigal Tv


நேரடிஒலிபரப்பு

ஆஞ்சநேயர் பெருமை

மாதகல் ஆஞ்சநேயர் ஆலயத்தின் ஜயப்பன் படங்கள்

முருகன் பாடல்கள்

தந்தைக்கு மந்திரத்தின்

சாரப் பொருளுரைத்து

தகப்பன் சுவாமி என பெயர் பெற்ற முருகா...

மண்ணுக்கும் விண்ணுக்கும்

சுவாமி என வந்த என் சுவாமிக்கும் நாதனே

சுவாமி நாதா...

 

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

உள்ளம் எல்லாம் உன் பெயரை

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

உள்ளம் எல்லாம் உன் பெயரை

சொல்லச் சொல்ல இனிக்குதடா

 

பிள்ளை பிராயத்திலே

பெரிய பெயர் பெற்றவனே

பிள்ளை பிராயத்திலே

பெரிய பெயர் பெற்றவனே

உள்ளம் எல்லாம் உன் பெயரை

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

 

 

உலகில் ஆடும் தொட்டில் எல்லாம்

உன் பெயர் பாடும்

உண்மை பேசும் மொழிகள் எல்லாம்

உன் புகழ் பேசும்

உலகில் ஆடும் தொட்டில் எல்லாம்

உன் பெயர் பாடும்

உண்மை பேசும் மொழிகள் எல்லாம்

உன் புகழ் பேசும்

யுகங்கள் எல்லாம் மாறி மாறி

சந்திக்கும் போது

யுகங்கள் எல்லாம் மாறி மாறி

சந்திக்கும் போது

உன் முகமலரின் அழகில் மட்டும்

முதுமை வராது

கந்தா முதுமை வராது,

குமரா...

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

உள்ளம் எல்லாம் உன் பெயரை

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...

 

 

முருகன் என்றால் அழகன் என்று

தமிழ் மொழி கூறும்

அழகன் எந்தன் குமரனென்று

மன மொழி கூறும்

முருகன் என்றால் அழகன் என்று

தமிழ் மொழி கூறும்

அழகன் எந்தன் குமரனென்று

மன மொழி கூறும்

உயிரினங்கள் ஒன்றை ஒன்று

வாழ்த்திடும் போது

உயிரினங்கள் ஒன்றை ஒன்று

வாழ்த்திடும் போது

அதன் உள்ளிருந்து வாழ்த்துவது

உன் அருளன்றோ

கந்தா உன் அருளன்றோ,

முருகா.....

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

உள்ளம் எல்லாம் உன் பெயரை

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...

 

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் ( இசை )

 

திருச்செந்தூரிலே வேலாடும் உன்

திருப்புகழ் பாடியே கடலாடும்

திருச்செந்தூரிலே வேலாடும் உன்

திருப்புகழ் பாடியே கடலாடும்

 

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

 

பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ

பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்

பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ

பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்

பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்

பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்

பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்

பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

 

இசை சரணம் - 2

 

சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்

சிங்கார மயிலாட தோட்டமுண்டு

சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்

சிங்கார மயிலாட தோட்டமுண்டு

உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை

உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை

அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை

அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை

 

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

திருச்செந்தூரிலே வேலாடும் உன்

திருப்புகழ் பாடியே கடலாடும்

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

 

வேலன் முகம் என் கனவில் வந்தது.

வரும் வெற்றிகளின் முன்னோட்டம் தானது.

நீலமயில் என் கனவில் வந்தது

நலம் நிகழ்வதற்கோர் அடையாளம் தானது.

வேலன் முகம் என் கனவில் வந்தது

வரும் வெற்றிகளின் முன்னோட்டம் தானது.

 

மேனியெங்கும் திருநீறே பூசினேன்

மேன்மைகளை பெருமைகளை பேசினேன்

நான் அவனை நாள் முமுதும் தொழுகிறேன்

அதன் நன்மைகளை நேருக்கு நேர் காண்கிறேன்.

வேலன் முகம் என் கனவில் வந்தது.

வரும் வெற்றிகளின் முன்னோட்டம் தானது.

 

 

குன்றங்களை கோயிலாக கண்டவன்

நல்ல குணமுடையோர் மனதில் இடம் கொண்டவன்

மன்றங்களில் இலக்கியமாய் திகழ்கிறான்

ஒரு மறை போலே முருகன் அருள்தருகிறான்.

வேலன் முகம் என் கனவில் வந்தது.

வரும் வெற்றிகளின் முன்னோட்டம் தானது.0

 

விண் வெளியில் நீல நிறம் காட்டுவான்

கந்தன் அன்னையைப் போல் பசி தீர்க்க ஊட்டுவான்

புன்னைகையால் நம் குறையை மாற்றுவான்

நாம் புரியாமல் அழுதாலும் தேற்றுவான்

 

வேலன் முகம் என் கனவில் வந்தது.

வரும் வெற்றிகளின் முன்னோட்டம் தானது.

நீலமயில் என் கனவில் வந்தது

நலம் நிகழ்வதற்கோர் அடையாளம் தானது.

 

வேலன் முகம் என் கனவில் வந்தது.

வரும் வெற்றிகளின் முன்னோட்டம் தானது.

முருகா‚ முருகா‚முருகா‚ முருகா ‚முருகா‚ முருகா‚ முருகா‚ முருகா

 

 

 

 

 

 

உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்

திருச்சி மலையினிலே...

நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்

அமர்ந்தார் மனதினிலே..

உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்

திருச்சி மலையினிலே

நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்

அமர்ந்தார் மனதினிலே..

 

சச்சிதானந்த சற்குருவாகிய நிமலன்

துதி தந்தையானபின் தாயுமான திரு நகரன்

சச்சிதானந்த சற்குருவாகிய நிமலன்

துதி தந்தையானபின் தாயுமான திரு நகரன்

அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன்

அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன்

எங்கள் ஆனை முகம் கொண்ட ஆதிநாதனாம் இறைவன்

அந்த உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்

திருச்சி மலையினிலே...

நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்

அமர்ந்தார் மனதினிலே..

 

பாடுதலும் அடி பரவுதலும் தொழிலாகும்

உனை நாடுதலும் அருள் நண்ணுவதும் நினைவாகும்

பாடுதலும் அடி பரவுதலும் தொழிலாகும்

உனை நாடுதலும் அருள் நண்ணுவதும் நினைவாகும்

கூடுதலும் கரம் கூப்புவதும் நமதெண்ணம்

கூடுதலும் கரம் கூப்புவதும் நமதெண்ணம்

வினை ஓடுவதும் பகை ஒடுங்குதலும் இனி திண்ணம்

உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்

திருச்சி மலையினிலே...

நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்

அமர்ந்தார் மனதினிலே..

உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்

திருச்சி மலையினிலே...

நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்

அமர்ந்தார் மனதினிலே..

வேல் இருக்க மயில் இருக்க வேல் முருகன் துணையிருக்க

நாளுக்கொரு கலக்கமென்ன நெஞ்சிலே

எல்லாம் நல்லதாக நடக்கும் அன்பர் வாழ்விலே

கந்தன் வேல் இருக்க மயில் இருக்க வேல் முருகன் துணையிருக்க

வேல் இருக்க மயில் இருக்க வேல் முருகன் துணையிருக்க

 

உருகி மனம் தான் இழகி முருகன் துணை கேட்பவர்க்கு

மறுகனமே கிடைக்கும் அவன் காட்சியே

தொண்டர் பெரும்கூ ட்டம் தான் இதற்கு சாட்சியே

ஆறு சுவை அவன் படைத்தான் ஆறு அறிவும் அவன் கொடுத்தான்

நூ று வகை நலம் தருவான் கந்தனே இன்னும் வேறு என்ன தேவை சொல்லு நண்பனே

 

வேல் இருக்க மயில் இருக்க வேல் முருகன் துணையிருக்க

வேல் இருக்க மயில் இருக்க வேல் முருகன் துணையிருக்க

 

அன்போடு நற்குணங்கள் ‚ பண்போடு நற் செயல்கள்

எங்கெங்கே அங்கே பார் குமரனை

வளம் எல்லாமும் படைத்தருளும் இறைவனை

திரு நீற்றில் மருந்திருக்க ‚ திருப்புகழில் இசையிருக்க

வெறும் பேச்சு ஏன் இந்த நாளிலே

படை வீடுகளே சொற்கம் இந்த உலகிலே

 

வேல் இருக்க மயில் இருக்க வேல் முருகன் துணையிருக்க

நாளுக்கொரு கலக்கமென்ன நெஞ்சிலே

எல்லாம் நல்லதாக நடக்கும் அன்பர் வாழ்விலே

கந்தன் வேல் இருக்க மயில் இருக்க வேல் முருகன் துணையிருக்க

வேல் இருக்க மயில் இருக்க வேல் முருகன் துணையிருக்க

 

சரணம் சரணம் சரணம் சுவாமி

அந்த பம்பா நதிக்கரை ஓரத்தில நிற்கும் பாலன் யாரு

சாமி அவனுக் என்ன பேரு

சாமின்னா சாமிங்க சக்தி உள்ள சாமிங்க

சந்தனத்த பூசி வந்து சாமியோட சாமியாக

யாலம் செய்து நின்னானுங்க

சாமின்னா சாமிங்க சபரிமல சாமிங்க

பந்தளத்து ராசனாக பம்பையில் கிடந்தெழுந்து பாரால வந்தானுங்க

 

அந்த பம்பா நதிக்கரை ஓரத்தில நிற்கும் பாலன் யாரு

சாமி அவனுக் என்ன பேரு

 

பெரும் பாதை அடியடியாக கடந்தாரை ஆற்றுகிறானே

சரண்என்று வந்தவர்க்கெல்லாம் கரம் தந்து ஏற்றுகிறானே

பெரும் பாதை அடியடியாக கடந்தாரை ஆற்றுகிறானே

சரண்என்று வந்தவர்க்கெல்லாம் கரம் தந்து ஏற்றுகிறானே

சில நேரங்களில் சிறுவனின் கோலம் சித்தனைப் போல தோன்றுதே

சில நேரங்களில் சிறுவனின் கோலம் சித்தனைப் போல தோன்றுதே

அவன் யாரோ சாமி அறிவாயோ

 

சாமின்னா சாமிங்க சக்தி உள்ள சாமிங்க

சந்தனத்த பூசி வந்து சாமியோட சாமியாக

யாலம் செய்து நின்னானுங்க

சாமின்னா சாமிங்க சபரிமல சாமிங்க

பந்தளத்து ராசனாக பம்பையில் கிடந்தெழுந்து பாரால வந்தானுங்க

அந்த பம்பா நதிக்கரை ஓரத்தில நிற்கும் பாலன் யாரு

சாமி அவனுக் என்ன பேரு

 

ஜயன்மாரின் குழுவில் அமர்ந்து அன்னதானம் கொள்ளுகிறானே

அவர் ஏற்றும் பம்பை விளக்கினில் அமர்ந்தேதான் செல்லுகிறானே

ஜயன்மாரின் குழுவில் அமர்ந்து அன்னதானம் கொள்ளுகிறானே

அவர் ஏற்றும் பம்பை விளக்கினில் அமர்ந்தேதான் செல்லுகிறானே

அவதாரத்தின் வகையை அறிய அடியவர் மனமும் ஏங்குதே

அவதாரத்தின் வகையை அறிய அடியவர் மனமும் ஏங்குதே

அவன் யாரோ சாமி அறிவாயோ

 

சாமின்னா சாமிங்க சக்தி உள்ள சாமிங்க

சந்தனத்த பூசி வந்து சாமியோட சாமியாக

யாலம் செய்து நின்னானுங்க

சாமின்னா சாமிங்க சபரிமல சாமிங்க

பந்தளத்து ராசனாக பம்பையில் கிடந்தெழுந்து பாரால வந்தானுங்க

அந்த பம்பா நதிக்கரை ஓரத்தில நிற்கும் பாலன் யாரு

சாமி அவனுக் என்ன பேரு

அவன் சிவன் அம்சமோ இல்லை கரி வம்சமோ

அவன் அபிசேகனோ இல்லை அலங்காரனோ

சாமின்னா சாமிங்க சபரிமல சாமிங்க

பந்தளத்து ராசனாக பம்பையில் கிடந்தெழுந்து பாரால வந்தானுங்க

அந்த பம்பா நதிக்கரை ஓரத்தில நிற்கும் பாலன் யாரு

சாமி அவனுக் என்ன பேரு

அந்த பம்பா நதிக்கரை ஓரத்தில நிற்கும் பாலன் யாரு

சாமி அவனுக் என்ன பேரு

 

 

தகதகதக தகவென ஆடவா

சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா

 

ஆல காலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே

நீல கண்டனே வேத நாயகா நீதியின் காவலனே

 

தாள வகைகளொடு மேள துந்துபிகள்

முழங்கிட ஓர் கணமே

காலைத் தூக்கியே ஆனந்த தாண்டவம்

ஆடுக மன்னவனே

 

 

முத்துக்கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு

வெள்ளம் துணையென

பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட

தித்திப்பது இறைவன் செயலென பத்தி தரும்

பரமன் துணையென சுத்தக்கொரு மனிதர் குலமொரு இசை பாட

கற்றுத் தரும் ஒரு வகை அறிவினில்

முற்றும் தெரிவது போல் மனிதர்கள்

வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட

 

திக்குப் பல திமிதிமிதிமியென

தக்கத் துணை தகதகதகவென

தக்கக் கடல் அலையென நடமிடு உலகாள.

 

இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி

எழிலோடு எமையாள வா

இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே

இயற்கையே உலகாள வா

 

அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே

அரசனே நடமாட வா

ஆடுகிற கால் அழகில் காடு பொடியாக வென

அம்மையுடன் நீயாடவா

 

சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ

நெருப்புக்குள் நீர் ஒன்று தரச் செய்த நீ

 

கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ

களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா

 

உலகத்து நிதியே சமயத்துப் பொருளே

இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே

 

ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா

நாத கீத போத வேத பாவ ராக தாளமோடு

 

அடியவர் திருமுடி வணங்கிட

கொடி உயர்ந்திட படை நடுங்கிட

 

தகதகதக தக என ஆடவா

சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா

 

பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா

பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா

சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்

பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா


கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு

கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்

கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்

உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா


ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு

நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு

நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு

தாயுண்டு மனம் உண்டு

தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்

தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு


ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?

ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?

மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?

மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?

ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ

ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ

மாதகல் ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிசேக வீடியோ

www.imaigal.net

சுவிஸ் பேர்ண் கல்யாண சுப்பிரமணியர் ஆலயம்

மாதகல் பாணகவெட்டி புவனேஸ்வரி அம்மன்

ஆயல திருவிழா வீடியோ 2013

இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள்.

மேலும்

மேலும்

 

மார்கழி மாதத்தில் அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே எழுந்து வாசல் தெளித்துக் கோலமிட்டு ஆற்றங்கரைக்குச் சென்று நீராடி ஆற்று மணலில் பாவை செய்து அதற்குப் பூஜை செய்வதை அக்காலத்தில் கன்னிப்பெண்கள்  வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மனதில் ஒரு லட்சிய புருஷனை வரித்து அப்படிப்பட்டவனே தனக்கு கணவனாக வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் அப்படியே கணவன் அமைவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.  அவ்வாறு இளம் பெண்கள் நீராடும் போது பாவையை நோக்கி ‘பாவாய்’ என அழைத்துப் பாடுவதே பாவைப்

ஒவ்வொரு தமிழ் வருடமும், தை மாதம் முதல் தேதியன்று, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. தை மாதத்தைத் தமிழர்கள் மங்கள மாதம் என்றும் போற்றுகின்றனர். ' தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது, ஆன்றோர்களின் அனுபவபூர்வமான வாக்கு.

மேலும்

சிவம் என்ற சொல்லுக்கு ' சுகம்' என்ற பொருள் உண்டு. சிவராத்திரி என்பதற்கு மங்களகரமான இரவு, இன்பம் தரும் இரவு என்பது பொருள். இந்த உலகம் முழுவதும் மஹா பிரளய வெள்ளத்தில் சிவபெருமானிடம் ஒடுங்கிய நாளே 'மகா சிவராத்திரி ' என்று சைவ சமயம் கூறுகின்றது.

மேலும்

 

அதர்மம் அழிந்து, தர்மம் வென்று, அதனால் உலகம் செழிக்க வேண்டும் என்று உணர்த்தும் தெய்வத்திருவிழாக்களில் நவராத்திரியும் ஒன்று. ஆதி பராசக்தியை சரஸ்வதி தேவி, லக்ஷ்மி தேவி, துர்க்கா தேவி ஆகிய அவளின் மூன்று அம்சங்களாகப் போற்றி வழிபடுவதே இந்த நவராத்திரிப் பண்டிகையின் நோக்கம்.

மேலும்

நரகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்று மக்களுக்கு விடுதலையும், மகிழ்ச்சியும் அளித்தார், மகாவிஷ்ணுவாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான். அவனைத் தான் கொல்லாமல், தன் மனைவி சத்தியபாமாவின் கைகளால் அவன் கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே, போர்க்களத்தில் மயங்கித் தேரில் சரிந்து வீழ்ந்து மாயம் புரிகிறார்,

மேலும்

தேங்காய் உடைப்பது ஏன்?

கோயில்களிலும், வீடுகளிலும் இறைவனுக்குப் பூஜை செய்யும் போது தேங்காய் உடைப்பதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். திருமணம், பண்டிகைகள் போன்ற சமயங்களிலும், புதியதாக வாகனம், வீடு வாங்கும் சமயங்களிலும் கூட முதலில் தேங்காய் உடைக்கப்படுகிறது. ஏன் தேங்காய் உடைக்கிறோம்,

மேலும்

மாதகல் ஆஞ்சநேயர்

ஆலயத்தின் ஜயப்பன் படங்கள்

மாதகல் பாணகவெட்டி புவனேஸ்வரி அம்மன்

ஆயலத்தின் படங்கள்