மாதகல் துரட்டியம்பதி ஆஞ்சநேயர் ஆலயம்

மாதகல் துரட்டியம்பதி ஆஞ்சநேயர் ஆலயம்

ஆஞ்சநேயர் பாடல்கள்

...

ஆஞ்சநேயர் பெருமை

அன்னதானம்

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் ஆகும். நாம் உயிர்வாழ தேவையான அத்திய அவசியமான பொருட்களில் ஒன்று உணவு. அந்த உணவை

இறைவனது திருவடியில் அனைவரும் ஒன்றினைந்து உண்ணும் போது கிடைக்கும் இன்பமும் அந்த உணவின் சுவையும் என்றும் மாறாது.நீங்கள் மிகுந்த பசியில் இருக்கும்போது உங்கள் தட்டில் உள்ள உணவினை உங்கள் அருகில் பசியில் இருப்பவருக்கு வழங்கினால் உங்கள் பலம் அந்த உணவு உண்பதைக் காட்டிலும் அதிகமாகும். உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நம் அனுபவப் பூர்வமாகவே பார்க்க முடியும். நாம் பிறருக்கு ஏதேனும் ஒன்றை வழங்கும்போது கிடைக்கக் கூடிய அற்புத உணர்வினை நம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அந்த உணவை தன் வாழ்நாளில் பல கோயில்களில் தொடக்கி வைத்ததோடு எல்லோருக்கும் கடைசி நாள் தன் கையால் உணவளித்து இறைவனடி சேர்ந்த

பெரியார் இராசா கந்தசாமி அவர்களின் சேவை போற்றத்தக்கது.

அவர் இருக்கும் போது நடைபெற்ற அன்னதானமானது இனி எப்போதும் மாதகல் துரட்டியம்பதி வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மாதகல் துறட்டியம்பதி ஆஞ்சநேயர் ஆயல தர்ம கர்த்தா -இராசா கந்தசாமி

தன் தாய் தந்தை இராசா பாக்கயம் நினைவாக பெரியார் இராசா கந்தசாமி அவர்கள் கட்டிய கோயிலே மாதகல் துரட்டியம்பதியில் அமைந்திருக்கும் வீர ஆஞ்சநேயர் கோயில்.

இந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் வெள்ளிக்கிழமைகளில் அன்னதானம் நடை பெற்று வருகின்றது.

இந்த வருடத்தில் இருந்து இராசா கந்தசாமி அவர்கள் நினைவாக ஒவ்வொரு ஞாயிறும் அன்னதானம் நடைபெற்று வருகின்றது.

 

மாதகல் ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிசேக வீடியோ

www.imaigal.net

மாதகல் ஆஞ்சநேயர் ஆலயத்தின் ஜயப்பன் படங்கள்

மாதகல் துரட்டியம்பதி ஆஞ்சநேயர் ஆலய திருபணிக்கு பணம் கொடுத்தவர்களின் பெயர்கள்

-

 

 

 

-

 

 

-

 

 

 

-

 

 

-

 

 

-

 

 

 

-

4 கோடி

 

 

45.000.00 ரூபாய்

 

1.000.00 ரூபாய்

 

5000 ரூபாய்

 

5000 ரூபாய்

 

 

2000 ரூபாய்

 

 

2000 ரூபாய்

-

 

 

-

 

 

-

 

 

 

-

 

 

-

 

 

-

 

 

 

-

01.இராசா கந்தசாமி (கோயில் தர்மகர்த்தா)

 

02.கந்தசாமி சேகர்

 

 

03.கணேஸ்

 

 

04.செல்லன்ரி

 

 

05.மகேந்திரம்

 

 

06.கடை ராசம்

 

 

07.பெரியாம்பிகை

 

மாதகல

 

 

 

டென்மார்க்

 

 

கனடா்

 

 

 

மாதகல்

 

 

மாதகல்

 

 

மாதகல்

 

 

 

மாதகல்

அனுமன் ஒரு இந்துக் கடவுளாக வணங்கப்படுகிறார். வைணவ ஆலயங்களில் இவரது உருவச்சிலையைப் பார்க்கலாம். இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமனுக்கு மாருதிஇ ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. அனுமனின் தாய் அஞ்சனாதேவிஇ தந்தை வாயு (பஞ்சபூதங்களில் ஒன்று) ஆவர். இராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர்.பிற்காலத்தில் வட இந்தியாவில் அனுமனை சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு.

 

சுந்தர காண்டம் எனப்படும் இராமாயணப் பகுதியில் அனுமனின் பின்வரும் வீரதீரச் செயல்கள் பேசப்படுகின்றன. அனுமன் இராமனை பிரிந்து தவிக்கும் சீதையைக் காண வான் மார்க்கமாக கடல் கடந்து இலங்கைக்கு சென்றதாக இராமாயணம் கூறுகிறது. சீதையை அசோக வனத்தில் சந்தித்துஇ இராமன் சீதையைத் தேடி வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியையும்இ இராமனின் அடையாளமாக அவரது கணையாழியையும் அனுமன் தருகிறார். பின்னர் சீதையைச் சிறைப் பிடித்து வைத்திருக்கும் இலங்கை வேந்தன் இராவணனை அவனது அரசவையில் சந்தித்துஇ சீதையை விடுவிக்குமாறும் இல்லாவிட்டால் இராமன் போர் தொடுக்க வேண்டி இருக்கும் என்பதனையும் தூதுவனாகத் தெரிவிக்கிறார். தூதுவனை மதியாத இராவணன்இ அனுமனின் வாலில் தீ வைக்கஇ அங்கிருந்து தப்பிய அனுமன் இலங்கைத் தலைநகரத்தையே தன் வாலில் இருந்த தீயால் எரிந்து சாம்பலாகும்படி செய்து விட்டுத் திரும்புகிறார். இலங்கையில் இருந்து திரும்பியவுடன் இராமனைச் சந்தித்துஇ "கண்டேன் சீதையை" என்கிற நற்செய்தியையும்இ இராவணன் சமாதானத்திற்கு உடன்படாததையும் தெரிவிக்கிறார்.அனுமன் "சொல்லின் செல்வன்" எனவும் அழைக்கப்படுகிறார். பின்னர் போர் மூள்கிறது. போரில்இ சஞ்சீவினி மலையையே தனது கரத்தால் தூக்கி வந்து போரிலே மயக்கமுற்றவர்கள் நினைவு திரும்பிட வழி வகுத்ததாகவும் இராமாயணம் சொல்கிறது.

 

 

இராமனும் இலக்குவனும் சுக்ரீவனின் இருப்பிடத்திற்கு அருகாமையில் வந்து கொண்டு இருக்கையில்இ அவர்கள் உண்மையில் யாரெனக் கண்டுகொள்ளஇ சுக்ரீவன் அனுமனை அனுப்புகிறான். அனுமன் அந்தண வேடத்தில் இராம இலக்குவனை அடைந்து அவர்கள் யாரென வினவுகிறான். இராமன் தாங்கள் யாரெனக் கூறத் தொடங்கியதுமேஇ அனுமன் இராமன் காலில் வீழ்ந்து தன்னை அனுமன் என அறிவிக்கஇ இராமன் அனுமனைக் கட்டித் தழுவிக் கொள்கிறார். அப்போது தொடங்கும் இராமன் - அனுமன் நட்பு எப்போதும் என்றென்றும் நிலைத்து திகழ்கிறது. அனுமனின் இதயத்தில் இராமன் எப்போதும் ஒளி வீசித் திகழ்கிறார்.

 

போரில் இராமனது தம்பி இலக்குவன் காயங்களுடன் மூர்ச்சை அடையஇ இலக்குவனைக் காப்பாற்ற சஞ்சீவினி மலையில் இருந்து மூலிகை மருந்தினைக் கொண்டு வருவதற்காக அனுப்பப் படுகிறார். இதை அறிந்த இராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறான். அனுமன் அவற்றைக் கடந்து சஞ்சீவினி மலையை அடைந்தார். ஆனால் அங்கு குறிப்பிட்ட மூலிகையினை அவரால் அடையாளாம் கண்டு கொள்ள இயல்வில்லை. அன்றைய தினம் முடிவடையும் முன் மூலிகையினை கொணர்ந்தால் தான் இலக்குவனைக் காப்பாற்ற இயலும் என்கிற தருவாயில்இ அனுமன் பெரியதோர் உருக்கொண்டுஇ சஞ்சீவினி மலையினை அப்படியே அடியோடு பெயர்த்தெடுத்துஇ வானத்தில் பறந்து போர்க்களத்தினை வந்தடைகிறார். பின்னர் மலையில் இருந்து மூலிகை மருந்து இலக்குவனுக்குத் தரப்படஇ இலக்குவன் உயிர் பிழைக்கஇ இராமன் பெருமகிழ்ச்சி கொண்டுஇ அனுமனை கட்டித் தழுவுகிறார். அனுமனைத் தனது தம்பிகளில் ஒருவராக அன்பொடு அறிவிக்கிறார்.

அனுமன் சஞ்சீவினி மலையைத் தூக்கிக் கொண்டு அயோத்தி வழியே வானத்தில் பறந்து வருகையில் இராமனது தம்பி பரதன் யாரோ அரக்கன் ஒருவன் அயோத்தியை தாக்க வருகிறான் என்று நினைத்துக் கொண்டு அனுமனை நோக்கி அம்பினைத் தொடுகிறார். அம்பினில் இராமன் பெயர் இருப்பதைக் கண்டுஇ அனுமனை சும்மா இருக்கஇ அவ்வம்பு அனுமனது காலைத் துளைக்கிறது. உடனே வானத்தில் இருந்து கீழிறங்கிஇ பரதனிடம் அவன் தமையன் இலக்குவனைக் காக்கவே மலையைத் தூக்கிச் செல்வதாகச் சொன்னதைக் கேட்டதும் பரதன் தன் தவறை நினைத்து வருந்துகிறார். பதிலுக்குப் பரதன் தான் ஒரு அம்பினை இலங்கையை நோக்கி செலுத்தினால் அதில் அனுமன் அமர்ந்து எளிதாக இலங்கையை அடையலாமே என்கிறார். அனுமனோ அதை மறுத்துவிட்டுஇ அடிபட்ட காலுடனே இலங்கையை நோக்கி விரைகிறார்.

 

இராவண வதம் முடித்து இராமன் முதலானோர் அயோத்தி திரும்பி இராமன் முடி சூட்டிய பின்இ தனக்கு உதவி செய்தவர்களுக்கு தக்க பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது இராமன் அருகே யாதொரு பரிசினையும் எதிர்பாராத அனுமன் வரஇ இராமன் அனுமனை ஆரத் தழுவிக்கொண்டுஇ அனுமன் செய்த உதவிகளுக்கெல்லாம் எப்பரிசினாலும் ஈடுகட்ட முடியாது எனப் புகழ்கிறார். அக்கணம் சீதையோ ஏதாவது ஒரு பரிசினை தங்கள் நினைவாக அனுமனுக்கு தர வேண்டுமன விழைந்துஇ தன் கழுத்தில் அணிந்திருந்த இரத்திங்கள் பதித்த விலை உயர்ந்த மாலையைப் பரிசளிக்கிறார். அதை பெற்றுக்கொண்ட அனுமன்இ அந்த மாலையில் பதித்திருந்த இரத்தினங்களை வெளியே எடுத்து அதில் இராமர்-சீதை தெரிகிறார்களா எனப் பார்க்கிறார். ஏனெனில் இராமர் சீதையை விட அவருக்கு உயர்வானது வேறொன்றுமில்லை. இதை அறியாத ஒரு சிலர் அனுமனைப் பார்த்து நகைக்கஇ அனுமனோ அனைவரும் அறியும் வண்ணம் தனது மார்பினைத் திறந்து அதில்இ தன் இதயத்தில் இராமர் சீதை வீற்றிருப்பதைக் காட்டுகிறார்.

 

இராமயணத்தைப்போல மகாபாரதத்தில் அனுமன் முக்கிய கதைப்பாத்திரம் இல்லை. ஆனால் பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கு ஒரு வகையில் அண்ணன் உறவு வருகிறது. பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும்போதுஇ காட்டு வழியே பீமன் பயணிக்கும்போதுஇ அங்கே வயோதிக குரங்கு ஒன்று படுத்துக் கொண்டிருக்கஇ அதன் வாலோ நீண்டு பீமன் நடந்து செல்லும் பாதையை அடைத்துக் கொண்டிருந்தது. பீமன் அதன் வாலை தள்ளி வைத்து விட்டு செல்லலாம் என எண்ணிஇ வாலைத் தூக்க யத்தனித்தான். ஆனால் சிறந்த பலசாலி எனப்பெயர் பெற்ற பீமனாலேயே அக்குரங்கின் வாலினை அப்புறப்படுத்த இயலவில்லை. பின்னர் பீமன்இ அது சாதரணக் குரங்கில்லை என உணர்ந்துஇ அக்குரங்கிடம் மிகுந்த மரியாதையுடன் யாரென வினவிடஇ அனுமன் தான் யாரென்பதை பீமன் அறியச் செய்கிறார்.

குருக்ஷேத்திரப் போரில்இ அர்ஜூனனின் தேரில் பறக்கவிடப்பட்டிருந்த கொடியில் அனுமனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இது மானசீகமாக தேரின் பலத்தினைக் கூட்டியதாகச் சொல்வார்கள். கண்ணன் போர்க்களத்தில் பகவத் கீதையினை அர்ஜூனனுக்கு உபதேசித்தபோதுஇ அனுமனும் கொடி வழியாக கேட்டதாகச் சொல்லப்படுகிறது. போர் நிறைவடைந்தபின்இ அர்ஜூனனும்இ கண்ணனும் தேரில் இருந்து கீழே இறங்கியபின்இ கண்ணன் அனுமனிடம் இதுவரை தேரின் கொடியாக இருந்தமைக்கு நன்றி சொல்லிடஇ உடனே அனுமன் தன் உருவினைக் காட்டிஇ கண்ணனை வணங்கி விட்டுஇ கொடியில் இருந்து மறைந்து விடுகிறார். அனுமன் மறைந்தவுடனேயேஇ தேர் எரிந்து சாம்பலாகி விடுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அர்ஜூனனைப் பார்த்து கண்ணன்இ "அர்ஜூனாஇ இதுவரை போரினில்இ இத்தேரின் மேல் வீசப்பட்ட அனைத்து கொடிய பாணங்களையும் தாங்கி நின்றது என்றால்இ அதற்கு நானும் அனுமனும் இத்தேரினில் இருந்ததுவே காரணம். இல்லாவிட்டால்இ இத்தேர் எப்போதோ அப்பாணங்களின் சக்தியினால் எரிந்து போயிருக்கும்" என்றார்.

 

பொதுவாக வைணவக் கோயில்களில் அனுமன் சிலை இருப்பதுண்டு. இதைத்தவிர அனுமனுக்காக மட்டுமே அமைந்த வழிபாட்டுத் தலங்களும் உண்டு. பெரும்பாலும் அனுமனின் பெரிய சிலைகள் இங்கே நிறுவப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் நாமக்கல்லில் இருக்கும் 18 அடி உயர அனுமன் சிலை மிகவும் புகழ் பெற்றது. காசியிலும் அனுமனுக்குத் தனியான கோயில் உண்டு.உலகிலேயே மிக உயரமான அனுமன் சிலைஇ ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ளது .இது 135 அடி ஆகும்.