ஆஞ்சநேயர் கோயில் தண்ணீர்ப்பந்தல் கட்டிடம்

www.Imaigal.net

ஆஞ்சநேயர் கோயில் தண்ணீர்ப்பந்தல் கட்டிடம்

ஆஞ்சநேயர் கோயில் தண்ணீர்ப்பந்தல் கட்டிடம் கட்டிய வரலாறு

ஆஞ்சநேயர் கோயில் தண்ணீர்ப்பந்தல் கட்டிடம் 2012 ஆம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் 30 லட்சம் ருபா செலவில் கட்டப்பட்டது.

இந்தக் கட்டிடத்தை ஆஞ்சநேயர் கோவிலை கட்டிய பெரியார் இராசா கந்தசாமி அவர்களின் இளைய மகன் சிவஞானசேகரம் கந்தசாமி

கட்டிமுடித்தார். இந்தக்கட்டிடத்தைக் கட்டுவதற்கு 2012ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டு 2013ம் ஆண்டு தன் தந்தையாருக்கு சொந்தமாக இருந்த

ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் இருந்த காணியை தந்தையாரிடம் பணம் கொடுத்து வாங்கிய சிவஞான சேகரம் 2014ம் ஆண்டு கட்டிடவேலைகளை

ஆரம்பித்து கிட்டத்தட்ட 7 மாததிற்குள் கட்டிமுடித்தார். இந்தக்கட்டிடம் கட்டிமுடிப்பதற்குள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டாலும்

சிறப்புற இந்தக்கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டது.

இந்தக்கட்டிடம் கோயில் திருவிழா வேளைகளில் தண்ணீர்ப்பந்தலிற்காகவும் மிகுதி வேளைகளில் இலவச கணினி வகுப்புக்கள் நடத்துவதற்காகவும்

கட்டப்பட்டது.

கணினி வகுப்புக்கள் இந்தக் கட்டிடம் கட்டுவதற்கு முதல் 1 வருடம் ஆஞசநேயர் கோயில் வாசலில் வைத்து நடாத்தப்பட்டது. பின் இந்த தண்ணீர்ப்பந்தல் கட்டிடத்திலும் 2 வருடம் நடாத்தப்பட்டது. இதன் முலம் 3000 மேற்பட்ட பிள்ளைகள் பயணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.