அம்மன் கோயில்

அம்மன் விரதம்

அம்மன் வழிபாட்டுக்கு வட மாவட்டங்களில் ஆடி வெள்ளியும், தென் மாவட்டங்களில் ஆடி செவ்வாய் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் முழுக்க சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

 

இந்த அம்பிகை ஆண் தெய்வங்களுக்கு எல்லாம் முந்திப் பிறந்ததால் இந்தப்பெயர் வந்ததாக கூறுவர். ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட 48 மடங்கு அதிக பலன் கிடைக்கும் என்பது ஒருவித நம்பிக்கை.

 

இந்த தானத்தில் அனைத்துவித காய்கறிகளையும் ஒன்றாக சமைத்த சோறு கொடுப்பது மிகவும் நல்லது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும் அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சம் அடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

 

அதிகாலை எழுந்து குளித்து சிவப்பு நிற ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று செந்நிற மலர் அல்லது செண்பக மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். நிவேதத்திற்குச் செந்நிற கனிகளே உகந்தது. அன்றைய தினம் விரதமிருந்து காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபட வேண்டும்.

 

ஏழைகளுக்கு துவரை தானம் செய்தல் நல்லது. மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். செம்பவள மோதிரமோ அல்லது கழுத்து சங்கிலியில் செம்பவளம் அமைத்தலோ நல்லது. இவ்விதம் விரதம் இருப்பவர்களுக்கு அம்மன் அருள் கிடைக்கும். ரத்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

 

அம்மன் விரதம்

ஆடி வெள்ளிக் கிழமைகளில் சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்ய வேண்டும். சிறிய பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, வளையல், உடை கொடுத்து அவர்களை அம்மனாக பாவித்து உணவளிக்க வேண்டும்.

 

இது கூடுதல் பலன்களை தரும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப் பெண்களுக்கு உடன டியாக திருமணம் நடைபெறும். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை மனம் உருக வழிபட்டால் பெண்களின் மனக்குறை தீரும் என்பது ஐதீகம். இதை சுக்கிர வார விரதம் என்று அழைப் பார்கள்.

 

ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றிருந் தாலும், பாவக்கிரகம் பார்வையினால் சுக்கிரன் பலம் இழந்து இருந்தாலும் இவ்விரதம் இருந்தால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிடைக்கும். இது முருகனையும், அம்பாளையும் நோக்கி இருக்கும் விரதம் ஆகும்.

 

சூரிய உதயத்திற்கு முன் குளித்து வெளிர் நீல ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று வெண் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். மயிலை முண்டகக் கண்ணி அம்மன் கோவிலில், ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் வைப்பது மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

 

அனறு பொங்கல் வைக்க உபயோகப்படுத்தப்படும் வரட்டியின் சாம்பல் விபூதிப் பிரசாதமாகத் தரப்படுகிறது. முப்பெரும் தேவிகளுக்கும் அடி வெள்ளி களில் முதல் 3 வாரங்கள் பூ அலங்காரமும், நாலாவது வாரம் காய் அலங்காரமும் ஐந்தாவது வாரம் பழ அலங்காரமும் செய்வார்கள்.

 

ஆடி கடைசி வெள்ளியன்று வரலட்சுமி நோன்பு அனுசரிக்கப்படுகிறது. தேவியின் பாதங்களில் திருமாங்கல்ய சரடு வைத்துப் பூஜித்து பிரசாமாகத் தருவார்கள். இதனை பெண்கள் பெற்றால் மாங்கல்ய பலம் பெருகும். தருமபுரி ஆதினத்துக்கு உரிய தேவஸ் தானங்களில் ஆடி வெள்ளியன்று நவசக்தி அர்ச்சனை செய்வார்கள்.

 

அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து விட்டு, 9 சிவாச்சாரியார்கள் 9 வகை மலர்களால் 9 சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சனை செய்வார்கள். இந்த அர்ச்சனைக்குத்தான் நவசக்தி அர்ச்சனை எனப்பெயர்.

 

மாரியம்மன் மருந்து மாரியம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியன்று கஞ்சி வைத்து வணங்கு வார்கள். இதை எப்படி வைப்பது என தெரிந்து கொள் ளுங்கள். `ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்' என்னும்போது, தூசு பறப்பது எம்மாத்திரம்ப இதனால் இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் கஞ்சி வைக்கிறார்கள்.

 

இதை `ஆடிக்கஞ்சி' என்றும் மாரியம்மன் மருந்து என்றும் சொல்வார்கள். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னி வேர், உழிஞ்சை வேர், சீற்றாமுடடி, கட லாடி வேர் ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றை அரை குறையாக தட்டியெடுத்து ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

 

அரிசியை கஞ்சியாக வேக வைத்து அதில், துணியில் கட்டிய மருந்தை 15 நிமிடம் போட்டு விட வேண்டும். பின்னர் இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. ஆடி மாதத்து குளிரிலும், காற்றிலும் வர வாய்ப்புள்ள நோய்களான இருமல், தொற்று நோய் வராது.

 

வெள்ளிக்கிழமை கனகப்பொடி உலர்ந்த தவிட்டை வெல்லத்தில் குழைத்து அதை தோசை போல் பரப்பி, தீக்கனலில் சுட்டெடுத்து உண்டாக்குவதே கனகப்பொடி. ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் கனகப்பொடி சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. இதை வெறும் மூட நம்பிக்கை என்று பலரும் நினைக்கிறார்கள்.

 

நவீன உணவுப் பொருட்களின் மத்தியில் இது போன்ற நாட்டுப்புற உணவை ஏன் உண்ண வேண்டும் என்று கேட்கலாம். அது ஐதீகம் ஆகும். குடும்பத்திலுள்ளவர்கள் எல்லோரும் வட்டமாக அமர்ந்து பங்கிட்டு வைத்து வெறும் வயிற்றில் உண்ணும் ஆசாரமே கனகப்பொடி அருந்துதல்.

 

உலர்ந்த தவிட்டில் வைட்டமின் பீ ஏராளமுண்டு. வெல்லத்தில் இரும்புச்சத்து அடங்கியுள்ளது. இதுவே கனகப்பொடியின் சிறப்பு. இதை அம்பாளுக்கு நைவேத்தியமாக படைத்து விட்டு சாப்பிடலாம்.

Ullam Tv

நேரடிஒலிபரப்பு

 

மாதகல் புவனேஸ்வரி அம்மன் ஆலயம்

அம்மன் பாடல்கள்

...
...

அம்மன் கவசம்

மாதகல் பாணகவெட்டி புவனேஸ்வரி அம்மன் ஆலய திருவிழா 17-03-2016

மாதகல் பாணகவெட்டி புவனேஸ்வரி அம்மன் ஆலய திருவிழா 16-03-2016

மாதகல் புவனேஸ்வரி பாணகவெட்டி அம்மன் ஆலய தேர்த்திருவிழா 22-03-2016

www.imaigal.net

மாதகல் பாணகவெட்டி அம்மன் ஆலய திருவிழா வீடியோ 2013